நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய் வருமுன் தவிர்ப்பதற்காகா இதய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எப்போதும் பின்பற்றுவதே சிறந்த வழியாகும். உங்களுக்கு நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய் இருப்பது கண்டறியப்ட்டால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டு பொருத்தமான சிகிச்சை முறையினை பெற்றுகொள்வதன் மூலம் நோய் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முடியும்.
நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய் தொடர்பான பாதிப்புகளை குறைக்க என்ன செய்ய முடியும்?
- நாளாந்த உடல் செயற்பாடுகளில் ஈடுபடல்.
- இதய ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ளல். உப்பு, நிரம்பிய கொழுப்பு, நிலைமாறும் கொழுப்பு, கொலஸ்ரோல் அடங்கிய உணவுகளை குறைத்தல்.
- இரத்த அழுத்தத்தை சீராக பேணுதல்.
- அளவுக்கு அதிகமான alcohol, caffeine ஆகியவற்றை குறைத்து கொள்ளல்.
- புகை பிடித்தலை தவிர்த்தல்.
- கொலஸ்ரோலை கட்டுபாட்டில் வைதிருத்தல்.
- ஆரோக்கியமான உடல் எடையை பேணுதல்.
நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய் ஏற்படுவதற்கு அடிப்படையக அமையக்கூடிய பிற நோய் நிலைமைகள்.
- உயர் இரத்த அழுத்தம்
- தைரோய்ட்
- Sleep apnea
- நீரிழிவு
- நாள்பட்ட நுரையீரல் நோய்
- பிற இதய நோய்கள் (மாரடைப்பு, இதய வால்பு நோய், இதய செயலிழப்பு)
- பரம்பரை
- உடல் பருமன்
No comments:
Post a Comment