நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய் அறிகுறிகளை துள்ளியமாக அடையாளம் காண்பது கடினம். இந் நோயானது ஒரு சதவீதத்தினரிற்கு மட்டுமே இருப்பது வைத்தியர்களினால் கண்டறியப்பட்டாலும் இந் நோயானது 65 வயதிற்கு மேற்பட்டவர்களைத் தாக்கும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டறியாது விட்டால் இதன் பாதிப்புக்களும் அதிகாரிக்கும். மேலும் பக்கவாதம் போன்ற பாரிய சிக்கல்களை தவிர்ப்பதற்காக ஆரம்பத்திலேயே இந்நோய் இருப்பது குறித்து எவ்வாறு கண்டறிவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.
எப்போது வைதியரை அணுக வேண்டும்?
எம்மில் பலர் வைதியசாலைக்கு செல்வதை சிரமமாகவே கருதுகின்றோம். இந் நோயானது இதய சந்தத்தில் ஏற்படுகின்ற ஒழுங்கற்ற தன்மையினால் ஏற்படுகின்றது . இது நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோயாக அறியப்படுகிறது. இந் நோயானது வெவ்வேறு நபர்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கும். இதய துடிப்பில் அல்லது உடல்லில் படபடப்பு தன்மையை நீங்கள் உணர்ந்தால் வைத்தியரிடம் சென்று உங்களை பரிசோதித்துப் பார்ப்பது முக்கியமாகும்.
பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தகூடிய 4 காரணிகள்
இந் நோயின் ஆரம்ப கட்டத்தில் எமது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந் நோய் நிலமை அதிகரிக்கும் போது இதயத்தில் பல அசாதாரண உணர்வுகள் ஏற்படுகின்றன. சிறிய படபடப்பு என தொடங்கி பின்னர் அடிக்கடி இது போன்ற நிலைமைகள் நிகழக்கூடும். இத்தகைய தற்காலிகமாக ஆரம்பிக்கும் (Paroxysmal) நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய் நாளடைவில் தொடர்ச்சியான அல்லது நிதந்தர நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோயாக மாறக்கூடும்.
நெஞ்சு வலி என்பது இதயத்தில் ஏதோவொரு பிரச்னை இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.ஆனால் இது நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய்யாகும் போது நெஞ்சு வலி என்பது மட்டும் ஒரு அறிகுறி அல்ல.
கவனிக்க வேண்டிய ஏனைய அறிகுறிகளாவன,
A Racing Heart beat
உச்ச வேகத்தில் இதயம் துடிப்பது போன்று உணர்ந்ததுண்டா? இவ் உணர்வு நீங்கள் பயப்படும் போது அல்லது உற்சாகமாக இருக்கும் போது சாதாரணமாக இருக்கமுடியும். ஆனால் இது உடலியல் எதிர்வினையை விடவும் அதிகமாக இருக்கும்.
உங்கள் இதயம் குறுநாடுகத்தில் இருக்கும் போது இதய மேலறைக்கு பல மின்சமிஞைகள் அனுப்படுகின்றது. இவை AV-node இன் வழியாக செல்லப் போட்டியிடுகின்றன. மின்சமிஞைகளில் இக் குழப்பம் இதயத்துடிப்பினை அதிகரிக்கின்றது அல்லது துடிப்பினை ஒழுங்கற்றதாக்குகின்றது.
படபடப்பு உணர்வு
இது உங்கள் இதயம் தன் துடிப்பில் ஒன்றினை தவிர்த்து விட்டதென உணர்வது. இது பொதுவானதொன்றாகும். இருப்பினும் அசாதாரண படபடப்புக்கள் தொடரும் போது நீங்கள் நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய்க்கு உள்ளாகி இருக்கலாம்.
சோர்வு
இதயம் திறமையாக செயல்படாத நிலையில் கலங்களுக்கு போதுமான ஓட்சிசன் ஏற்றபட்ட இரத்தத்தை வழங்க முடியாதிருக்கும். உடலுக்கு தேவையான ஓட்சிசன் கிடைக்கப்பெறாத போது சோர்வு, பலவீனம் மற்றும் சோம்பல் என்பவற்றை உணர முடியும்.
நெஞ்சுவலி / இறுக்கம்
இதயத்தில் ஒரு இறுக்க உணர்வை பல காரணிகள் ஏற்படுத்தும். இதை ஒரு நெஞ்செரிவாக எண்ணினாலும் பொதுவாக இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது. நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய்நிலைமையும் மார்பு இறுக்க உணர்வை ஏற்படுத்தக்கூடும். எந்த காரணமும் இல்லாமல் லேசான மூச்சுத்திணறலை உணர ஆரம்பிக்கலாம். ஒரு காலத்தில் உங்களுக்கு சுலபமாக இருந்த செயல்கள் தற்போது செய்ய முடியாமல் போகலாம். உங்கள் ஆற்றல் மட்டம் உங்கள் வயதினரிலும் பார்க்க குறைவாக இருக்கும்.
இது உண்மையில் நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய்தான?
நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய்கனா அறிகுறிகள் பாரியளவில் வேறுபடுகின்றது. நீங்கள் மார்பு இறுக்கத்தை உணர்வதாக கூறும் போது இனொருவர் தமக்கும் இருப்பதாக சொல்ல்வார். ஆனால் நீங்கள் ஒரு திடீர் படபடப்பை உணரலாம் ஆனால் மற்றொரு நபர் சிறிதளவாக உணர்ந்திருக்கலாம். பல அறிகுறிகள் ஆளுக்கு ஆள் ஒத்திருக்கும்.
- Acid Reflux
வயிற்றில் உள்ள அமிலம் உணவு குழாய்க்கு மேல் நகர்வது நெஞ்செரிச்சலைக் குறிக்கும். இது எரியும் உணர்வினை ஏற்படுத்தும் சில சமயங்களில் இது வலியை ஏற்படுத்துகின்றது. சிலர் நெஞ்செரிவை மாரடைப்பு என்று தவறாக புரிந்து கொள்கின்றனர்.
- Hyperthyroidism
அதி தைரொயிட் சுரப்பு நோய் தைரொயிட் சுரப்பி அதிகமாக தைரொயிட் ஓமோனை உற்பத்தி செய்யும் போது மூச்சுத்திணறல், அதிகரித்த இதயத்துடிப்பை ஏற்படுத்தும். ஒரு அசாதாரண உணர்விற்கு வழிவகுக்கும்.
- A Panic Attack
பயம், பதற்ற உணர்வு திடீர் என்று ஏற்படும். அதிரினலின் என்ற ஓமோன் சுரக்கும் போது முழு உடலையும் பாதிக்கும். சில நேரங்களில் மார்பு வலி அல்லது ஒரு இறுக்க உணர்வை ஏற்படுத்தும்.இதய படபடப்பினை அல்லது இலேசாக உணரலாம்.
- பிற இதய நோய்கள்
நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய்யினை அவ்வாறு கண்டறிவது ?
இது பல அறிகுறிகளை கொண்டது. திடீரென ஏற்படும் அறிகுறிகள் பெரிய சிக்கலாக இருக்கும். நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய் அறிகுறிகள் சுழற்சி முறையில் ஏற்படுவதை அவதானிக்கலாம். சிறிது நேரத்தில் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருக்கலாம்.
ECG/EKG எடுப்பதன் மூலம் இதய சந்தத்தினை மதிப்பிட்டு நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய்யினை அறிந்து கொள்ளலாம். அடிக்கடி நோய் அறிகுறிகளை காட்டுபவர்களின் இதய சந்தத்தில் ஏற்படுகின்ற அசாதாரண நிலைமையையே பொதுவாக உணரிகளால் உணர முடியும்.
Paraxymal நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய் பொதுவாக எதிர்வு கூற முடியாத மற்றும் அரிதான அறிகுறிகளையே ஏற்படுத்துகின்றது. இந்த சந்தர்ப்பங்களில் மருத்துவர்களின் பரிந்துரையின்படி சோதனைகளை செய்து கொள்வது பொருத்தமானதாகும்.
முதல் சோதனையின் போது நெஞ்ச மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்க நோய்யினை அறிந்து கொள்ள முடியாது விடடாலும் வேறு சோதனைகளும் உண்டு. அறிகுறிகளை தெளிவாகவும் முழுமையாகவும் உங்கள் மருத்துவர்களுக்கு விபரிப்பதன் மூலம் இந் நோய் நிலைமை ஏற்பட்டுள்ளதென கண்டறிந்து இலகுவாக சிகிச்சை முறையினையும் இனங்கண்டுகொள்ள ஏதுவாகும்.

